Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் தொடர்; நடைபெறவுள்ள மினி ஏலம் ..யாருக்கு எவ்வளவு கோடி தெரியுமா?

    ஐபிஎல் தொடர்; நடைபெறவுள்ள மினி ஏலம் ..யாருக்கு எவ்வளவு கோடி தெரியுமா?

    ஐபிஎல் தொடரில் பங்குபெறவுள்ள வீரர்களின் ஏலம் கொச்சியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐபிஎல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் தற்போது 10 அணிகள் விளையாடி வருகின்றனர். 

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பின்படி, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுடைய வீரர்களின் பட்டியலில் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, சிறிய அளவிலான வீரர்களின் ஏலம் நடைபெறும்.

    இதை்தொடரந்து, வருகின்ற டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏலத்தில், இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமிரான் கிரீன் மற்றும் இங்கிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் சாம் கரனும் வருகிறார். இதில் சிஎஸ்கே குறி சாம் கரன் தான். ஆனால் பஞ்சாப் அணி, இந்த மூன்று வீரர்களையும் தங்களது அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளது.

    இந்த ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் கூடுதலாகத் தலா ரூ. 5 கோடியைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும்,  தங்களிடம் மீதமுள்ள தொகையுடன் இந்த ரூ. 5 கோடியையும் சேர்த்துக்கொண்டு இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். 

    மேலும், 10 அணிகளில் பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ. 3.45 கோடி மீதமுள்ளது. இதன்பின்னர், சென்னை அணியிடம் ரூ. 2.95 கோடி மீதமுள்ளது. நடப்பு சாம்பியன் குஜராத்திடம் ரூ. 15 லட்சம் மீதமுள்ளது. லக்னோ அணி தங்களது முழு பணத்தையும் காலி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: டி20 உலக கோப்பை; இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இந்திய அணி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....