Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலகக் கோப்பையில் பங்குபெறவுள்ள இந்திய அணி அறிவிப்பு..

    உலகக் கோப்பையில் பங்குபெறவுள்ள இந்திய அணி அறிவிப்பு..

    தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மகளிர் அணிகளின் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியானது பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கடந்த முறை (2020) இந்திய அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது. 

    இதனால், இம்முறை தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தன்னை நிரூபிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீராங்கனைகள் குறித்த கேள்வியானது தொடர்ந்து நீண்ட வண்ணம் இருந்தது. 

    இந்நிலையில், உலகக் கோப்பைத் தொடருக்காக 15 பேர் கொண்ட  இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    உலகக் கோப்பை அணி: 

    ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்குர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே. ரிசர்வ்: ஸ்னேஹ ராணா, மேக்னா, மேக்னா சிங்.

    ‘தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதை..’ – வேட்டி, சேலை பிரச்சினை குறித்து எடப்பாடி அறிக்கை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....