Thursday, May 2, 2024
மேலும்
    Homeபிரேக்கிங் நியூஸ்'இனி கிரிக்கெட் கிடையாது'; ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மித்தாலி ராஜ்!

    ‘இனி கிரிக்கெட் கிடையாது’; ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மித்தாலி ராஜ்!

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜ் அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வினை இன்று அறிவித்துள்ளார்.

    39 வயதாகும் மித்தாலி ராஜ், ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1999ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடிய மித்தாலி ராஜ், அறிமுகப் போட்டியிலேயே 114 ரன்கள் அடித்து இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்து அசத்தினார்.

    2019ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்த மித்தாலி, இந்தியாவில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இன்று வரை நீடித்து வருகிறார்.

    2005ம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மித்தாலி ராஜ், இந்திய அணியினை இரண்டு முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    இந்திய அணியில் எந்த கேப்டனும் இரண்டு முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அணியினை அழைத்துச் சென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    300 போட்டிகளுக்கும் மேல் விளையாடியுள்ள மித்தாலி ராஜ், அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 10,868 ரன்களை குவித்துள்ளார். மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இந்த அளவு ரன்களைக் குவித்துள்ள ஒரே வீராங்கனை மித்தாலி ராஜ் மட்டுமேயாவார்.

    12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள இவர் 2002ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த போட்டியில் 214 ரன்களைக் குவித்தார். இந்த போட்டியின் போது அவருக்கு வயது 19 மட்டுமே.

    இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருது, கேல்ரத்னா விருதுகளை பெற்றுள்ள மித்தாலி ராஜ்ஜின் வழக்கை பல பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

    தனது ஓய்வு பற்றி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மித்தாலி, ‘கிரிக்கெட் உடனான எனது பயணம் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் கொண்டதாய் இருந்துள்ளது. ஒவ்வொரு தருணங்களும் எனக்கு ஒரு புதிய விடயத்தினைக் கற்றுக்கொடுத்துள்ளது. கிரிக்கெட்டில் நான் பயணித்த இந்த 23 வருடங்களும் மிகவும் முழுமையானதாகவும், அனுபவிக்கக் கூடியதாகவும் இருந்துள்ளது.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    மித்தாலி ராஜ்ஜின் இந்த ஓய்வு அறிவிப்பினையடுத்து பலரும் தங்களது வாழ்த்தினை கூறி வருகின்றனர். 

    தனது சொந்த மொழியினை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....