Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதன் காதலியை மணக்கிறார், பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

    தன் காதலியை மணக்கிறார், பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

    இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை இன்று மணக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல். இவருக்கும் பாலிவூட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. 

    கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர்களாக இருந்த நிலையில், இருவருக்கிடையிலும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்து பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, திருமண ஏற்பாடுகள் அதிவேகத்தில் நடந்து வந்தன. நடிகர் சுனில் ஷெட்டி தரப்பில் அதிகாரப்பூர்வமாக திருமணம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புனே அருகில் உள்ள கண்டாலாவில் இருக்கும் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

    நேற்று திருமண சடங்குகள் தொடங்க, இன்று மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் பாலிவூட் பிரபலங்களில் சிலரும், கிரிக்கெட் பிரபலங்கள் சிலரும் கலந்துக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வெளி மாநிலங்களில் தஞ்சம் புகுந்துள்ள ரவுடிகளை கைது செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....