Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதென்னாப்பிரிக்காவுக்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா....மிஸ் பண்ண இஷன், சாதிச்ச ஷ்ரேயாஸ்!

    தென்னாப்பிரிக்காவுக்கு தரமான பதிலடி கொடுத்த இந்தியா….மிஸ் பண்ண இஷன், சாதிச்ச ஷ்ரேயாஸ்!

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்க அணி 3 இருபது ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    இருபது ஓவர் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், நேற்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

    இதையும் படிங்க:இன்று இரண்டாம் ஒருநாள் போட்டி…தொடரை தக்கவைக்குமா இந்திய அணி?

    இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிகாக் 5 ரன்களுக்கும், யானேமன் மலான் 25 ரன்களுக்கும் வெளியேறினாலும், அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் 79 ரன்களையும், ரீஸம் ஹெண்ட்ரிக்ஸ் 74 ரன்களையும் விளாசினர். 

    மேலும், ஹென்ரிச் கிளாசென் 30, வெய்ன் பார்னெல் 16, கேப்டன் கேசவ் மஹராஜ் 5 ரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் டேவிட் மில்லர் 35, ஜோர்ன் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தத்தில் தென்னாப்பிரிக்க அணி  50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 

    279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அதன்படி, கேப்டன் ஷிகர் தவன் 13, ஷுப்மன் கில் 28 ரன்களுக்கு வெளியேற, இஷான் கிஷண் – ஷ்ரேயஸ் ஐயர் கூட்டணி 161 ரன்கள் விளாசி இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றது. 

    சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷண் 93 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சஞ்சு சாம்சன் துணை நிற்க, ஷ்ரேயஸ் ஐயர் சதமடித்தார். ஆட்டத்தின் முடிவில் ஷ்ரேயஸ் 113 ரன்களுக்கும், சஞ்சு சாம்சன் 30 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 45.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வென்றது.

    3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒரு வெற்றியையும், தென்னாப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இறுதிப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....