Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'புது வரலாறே..' - இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செய்த சாதனை!

    ‘புது வரலாறே..’ – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி செய்த சாதனை!

    பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

    தென்னாப்பிரிக்காவில் பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.  இத்தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. 

    இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச்சிலும், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட அதனின் விளைவாக, இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் வெறுமனே 68 ரன்கள் மட்டும் எடுத்து, 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 

    இதைத்தொடர்ந்து, 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி தனது பந்துவீச்சு மூலம் நெருக்கடி தந்தாலும், இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. 

    இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ஐசிசி போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் இந்திய மகளிர் அணி என்ற பெருமையை ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. 

     மேலும், இந்திய மகளிர் அணியின் இந்த வெற்றிக்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி; விமர்சனங்களுக்கு உள்ளாகும் இந்திய அணி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....