Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்; நெருக்கடியில் இந்திய அணி..

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்; நெருக்கடியில் இந்திய அணி..

    இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இன்னும் நூறு ரன்கள் தேவைப்படுகிறது. 

    இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது. 

    இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில்  227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பின்னர், இந்திய அணியினர் பேட்டிங்கில் களமிறங்கினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி,விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இதன்பின்பு, நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. இந்திய வீரர்களின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருக்க, ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இணை இந்திய அணியை மீட்டெடுத்தது. 

    ரிஷப் பண்ட் 93 ரன்களில் சதத்தை தவறவிட, ஷ்ரேயாஸ் ஐயர்  87 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

    மொத்தத்தில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 314 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, வங்கதேச அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி அந்த அணி 7 ரன்களை எடுத்தது. 

    இதைத்தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, முதல் பகுதியில் 4 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம். ஷான்டோ, மோனினுல் ஹக் தலா 5 ரன்களுக்கும் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 13 ரன்களுக்கும் முஷ்ஃபிகுர் ரஹிம் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். அஸ்வின், உனாட்கட், சிராஜ், அக்ஷர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள்.

    வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 70.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல 145 ரன்கள் இலக்காக நிர்ணயமானது. 

    இதையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. எளிதான இலக்கை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்க்கையில், இந்திய அணியானது தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. சுப்மன் கில், கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி போன்றோர் தனது விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழந்தனர். இதனால், இன்றைய நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்துள்ளது. 

    இந்நிலையில், மீதமிருக்கும் இரண்டு நாட்களில் இந்திய அணி 100 ரன்களை எடுத்தால் வெற்றி பெறும். மாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தால் இந்திய அணி தோல்வியுறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘திமுகவை வேரோடு வீழ்த்தி காட்டுவோம்’ – அதிமுகவினர் எம்ஜிஆர் நினைவிடம் முன் உறுதி ஏற்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....