Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுநிறைவடைந்த காமன்வெல்த்; இந்தியா எவ்வளவு பதக்கங்களை வென்றது?

    நிறைவடைந்த காமன்வெல்த்; இந்தியா எவ்வளவு பதக்கங்களை வென்றது?

    இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 22 தங்கம் உள்பட 66 பதக்கங்களை வென்றுள்ளது. 

    2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் நடைபெற்று வந்தது. இப்போட்டிகளில் 215 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி கலந்து கொண்டது. ஜூலை 29-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட்  8) அனைத்து போட்டிகளும் நிறைவடைந்தன. 

    பொதுவாக, இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில்தான் இந்த வருடமும் காமன்வெல்த் இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்கம் பகுதியில் நடைபெற்றது. 

    இந்த காமன்வெல்த் போட்டியில், இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-ம் இடம் பிடித்தது. ஒட்டுமொத்தமாக, இப்போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 61 பதக்கங்களை வென்றனர். 

    மேலும், போட்டியின் இறுதி நாளான நேற்று (ஆகஸ்ட்  8) பாட்மிண்டனில் பி.வி. சிந்து, சாத்விக் – சிராஜ் ஜோடி, லக்ஷயா சென், டேபிள் டென்னிஸில் சரத் கமல் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்கள். இத்துடன், இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. டேபிள் டென்னிஸில் தமிழக வீரர் சத்யன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய அணி 12 விளையாட்டுகளில் பதக்கங்களை வென்றது. மல்யுத்தம், பளு தூக்குதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பாரா டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி தான் அதிகப் பதக்கங்களை வென்றது. குறிப்பாக மல்யுத்த விளையாட்டில் இந்திய அணி அதிகபட்சமாக 6 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியது. 

    ஹாக்கி போட்டியில், இந்தியா முதல்முறையாக ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வென்றுள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கமும், மகளிர் அணி வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். 

    இதைத் தொடர்ந்து, அதிகத் தங்கப் பதக்கங்களை வென்றவராக தமிழகத்தின் சரத் கமல் திகழ்ந்துள்ளார். இந்த காமன்வெல்த் போட்டிகளில் இவர், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் அணி, ஒற்றையர், கலப்பு இரட்டையர் என மூன்று போட்டிகளில் அவர் தங்கம் வென்றார். இதுமட்டும் அல்லாது, ஆடவர் இரட்டையர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் என ஒரே போட்டியில் 4 பதக்கங்களுடன் மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.

    2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த்  போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில்  நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....