Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; யாரெல்லாம் இந்திய அணியில்?

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; யாரெல்லாம் இந்திய அணியில்?

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. 

    4 டெஸ்ட் போட்டிகளில், இரு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அணியில், ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாண்டியா வழிநடத்துவார்.

    மேலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத கே.எல். ராகுல், அக்ஷர் படேல் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். 

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: 

    ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேய்ஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல். ஹர்த்திக் பாண்டியா (துணை கேப்டன்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.

    ஆஸ்திரேலியாவை சுருட்டிய இந்தியா; ஜடேஜாவால் கிடைத்த வெற்றி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....