Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு

    இந்தியா உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு

    இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அடங்கிய நான்கு நாடுகளைக் கொண்ட குழுவின் முதல் உச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. 

    இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ஒரு அமைப்பாக இணைந்துள்ளன. இந்த அமைப்புக்கு ஐ2யு2 (I2U2) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு, பாதுகாப்பு போன்ற துறைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதே இந்த ஐ2யு2 அமைப்பின் முக்கிய நோக்கமாகும். 

    இந்நிலையில், ஐ2யு2 அமைப்பின் முதல் மாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலிய பிரதமர் யாகிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சையத் அல்-நஹ்யான் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 

    இந்த மாநாட்டில், நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு, பாதுகாப்பு போன்ற துறைகளின் மேம்பாடு குறித்தும், கட்டமைப்பு மேம்பாடு, பசுமை தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்வது பற்றியும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....