Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஏழுமலையானுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை கொடுத்த பெண் பக்தர்

    ஏழுமலையானுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை கொடுத்த பெண் பக்தர்

    ஏழுமலையான் மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை நன்கொடையாக தமிழக பெண்மணி ஒருவர் வழங்கியுள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்திபெற்ற திருக்கோயில் ஆகும். ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் தங்களால் முடிந்த  நேத்திக்கடன்களையும் நன்கொடைகளையும் தருவது வழக்கம். 

    அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சொந்தமாக வீடுகளும் நிலங்களும் என சுமார் 900-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அசையா சொத்துக்கள் உள்ளன. அதே சமயம் நேபாள நாட்டிலும் சொத்துக்கள் இருக்கின்றன. இதன் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் ஆகும். 

    அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் பத்திரத்தை ஏழுமலையான் கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். 

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கோடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற செவிலியர் என்.கே நேமாவதி. இவர் நேற்று காலை திருப்பதிக்கு சென்றார். இதையடுத்து அவர் திருப்பதியில் இருக்கும் தேவஸ்தான அலுவலகத்தில் எஸ்டேட் அதிகரியான மல்லிகார்ஜுனவிடம் தனது 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டின் ஆவணங்கள் சாவியைக் கொடுத்து, இதனை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தார்.

    நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய முன்னாள் எம்.பி? – சர்ச்சையில் இலங்கை அரசியல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....