Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் அதி கனமழை வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

    கேரளாவில் அதி கனமழை வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

    திருவனந்தபுரம்: கேரளாவில் 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    அதன்படி, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருசூர், மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, ஆலப்புழா, கண்ணூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு சிவ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கேடு மாவட்டங்களிலும் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    மேலும், கேரள மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

    கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை கேரள மாநிலம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மேலும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தை போன்று பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....