Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்கூட இருந்தே குழி பறித்த தம்பி மனைவி ! பெண் தலைமை ஆசிரியை கொலையில் திடீர்...

    கூட இருந்தே குழி பறித்த தம்பி மனைவி ! பெண் தலைமை ஆசிரியை கொலையில் திடீர் திருப்பம்

    சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை சேர்ந்தவர் ரஞ்சிதம். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ரஞ்சிதத்தின் வீட்டில் புகுந்து அவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் உட்பட இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட ரஞ்சிதத்தின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் முதலில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த திருமதி.நதியா என்பவரிடமும் விசாரணை மேற்கொண்ட போது, அவர் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அதில் நதியா, கொலை செய்யப்பட்ட ரஞ்சிதத்தின் தம்பி மனைவி என்பது தெரிய வந்தது. நதியாவின் கணவர் தற்போது வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் அது கள்ள காதலாக மாறியுள்ளது .

    இந்த விவகாரம் ரஞ்சிதத்துக்கு தெரியவந்து, உடனே நதியாவை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் பதட்டமடைந்த நதியா, ரஞ்சிதம் எங்கே தனது உறவை பற்றி வெளிநாட்டில் உள்ள தனது கணவரிடம் சொல்லிவிடுவாரோ என்று பயந்து சூர்யா மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரஞ்சிதத்தை கொலை செய்துள்ளார்.

    இந்த கொலை சம்பவம் சிவகங்கை மாவட்ட மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

    இதையும் படிங்க: பொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....