Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பெரியார் குறித்து ட்விட்டரில் பரபரப்பாகும் ஹாஷ்டாக்

    பெரியார் குறித்து ட்விட்டரில் பரபரப்பாகும் ஹாஷ்டாக்

    சென்னை: தந்தை பெரியாரின் பிறந்த நாளில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிறது ஹாஷ்டாக். 

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அரசு அலுவலங்களில் இதற்கான உறுதி மொழிகள் ஏற்கப்படுகின்றன. 

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பெரியாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். 

    இதையும் படிங்க : தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    இதனிடையே, சமூக வலைத்தளமான  ட்விட்டரில் #HBD_ராம்சாணி என்ற பெயரில் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் ஈ வெ. ராமசாமி பெரியாரின் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாப்பட்டு வரும் இந்தநிலையில், சமூக வலைத்தளமான  ட்விட்டரில் #HBD_ராம்சாணி என்ற பெயரில் ட்ரெண்டிங் ஆகும் ஹாஷ்டாக் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....