Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழகத்துக்கு ராம்சர் அங்கீகாரம்; 'மகிழ்ச்சி' என பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்துக்கு ராம்சர் அங்கீகாரம்; ‘மகிழ்ச்சி’ என பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சென்னை: தமிழகத்தில் உள்ள மேலும் 6 சதுப்பு நிலங்களுக்கு ‘ராம்சர்‘ சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் 13 சதுப்பு நிலங்களை ராம்சர் தளங்களாக அறிவிக்க மத்திய அரசுகளுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ராம்சர் பட்டியிலில் 3 தமிழக சதுப்பு நிலப்பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. அவற்றுள், தமிழகத்தில் இருந்து, பள்ளிக்கரணை சதுப்புநிலம், பிச்சாவரம் சதுப்புநிலம், கரிக்கிளி பறவைகள் சரணாலயம் ஆகியவை இடம்பெற்றன. 

    இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் மற்றும் உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம் ஆகிய 6 சதுப்பு நிலங்கள் ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் மேலும் 6 சதுப்பு நிலங்கள் தற்போது ராம்சர் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. 

    மேலும், இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் பெருமைக்கு உரித்தானதோடு, தமிழ்நாடு அரசின் சதுப்பு நில இயக்கத்துடன் நன்றாக பொருந்திப் போகிறது. இந்தச் சிறப்பான சாதனைக்காகத் தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.

    இவ்வாறாக மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

    தமிழகத்தில் உள்ள ராம்சர் சதுப்பு நிலங்கள்:

    1. கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்
    2. மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம்
    3. வேம்பனூர் சதுப்பு நிலம்
    4. வெள்ளோடை பறவைகள் காப்பகம்
    5. வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம்
    6. உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்
    7. பள்ளிக்கரணை சதுப்புநிலம்
    8. பிச்சாவரம் சதுப்புநிலம்
    9. கரிக்கிளி பறவைகள் காப்பகம்
    10. கோடியக்கரை வனஉயிரின காப்பகம்

    ராம்சர் சதுப்புநில பட்டியலில் பள்ளிக்கரணையும், பிச்சாவரமும் இணைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....