Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்போதைப்பொருள் ஒழிப்புக்கு உறுதி மொழி எடுத்த அரசு மதுபான விற்பனையில் சாதனை- அண்ணாமலை சாடல்

    போதைப்பொருள் ஒழிப்புக்கு உறுதி மொழி எடுத்த அரசு மதுபான விற்பனையில் சாதனை- அண்ணாமலை சாடல்

    தங்களின் பயங்கரமான பாசாங்குத்தனத்தால் நம்மை அடிக்கடி வியப்பில் ஆழ்த்துவதை திமுக நிறுத்தாது என தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி, மண்டல வாரியாக, மதுரை மண்டலம் ரூ.58.26 கோடி, சென்னை மண்டலம் ரூ.55.77 கோடி, சேலம் மண்டலம் ரூ.54.12 கோடி, திருச்சி மண்டலம் ரூ.53.48 கோடி, கோவை மண்டலம் ரூ.52.29 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14-ம் தேதியே மதுபானங்களை வாங்குவதற்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். இதனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் அன்றைய தினம் மட்டும் வழக்கமான நாட்களை விட அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதி எவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது என்ற தகவலை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று (ஆகஸ்ட் 16) வெளியிட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஆகஸ்ட் 11-ல் போதையில்லா தமிழகத்தை உருவாக்க முதலமைச்சர் உறுதிமொழி எடுத்தார். ஆகஸ்ட் 14-ல் டாஸ்மாக் நிறுவனம், ஒரு நாளில் ரூ.273.92 கோடிக்கு மதுபான விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தங்களின் பயங்கரமான பாசாங்குத்தனத்தால் நம்மை அடிக்கடி வியப்பில் ஆழ்த்துவதை திமுக நிறுத்தாது’ என்று பதிவிட்டுள்ளார்.

    “தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது நடந்துள்ளது” – வெற்றியைத் தொடர்ந்து ஓபிஎஸ் பேச்சு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....