Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கோரிக்கை வைத்த...

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும்: அரசுக்கு கோரிக்கை வைத்த திருமாவளவன்

    நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக மாநில அரசும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு நவீன கருவிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    முதலமைச்சர் தலைமையில் தீக்ஷா ஆய்வு கூட்டத்தில் இரண்டாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன்,

    கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தயாரித்துள்ள கருவியை வாங்க வேண்டும் எனவும் இதற்காக மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தலா ₹20 லட்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மாநில அரசும் இந்த திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்தார் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் சரி என அழைக்கப்பட்டு வருகிறது அந்த பகுதிகளில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தார்

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கக்கூடிய ஜாதி பெயர்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் செயல்படுவது போல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குவது போல் மாநில அரசும் ஒரு கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி வரவேண்டும் எனவும் 60 கிலோமீட்டர் இடையிலான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்வதற்கான தனி ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார் முதியோருக்கான ஓய்வு தொகை பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முதியோர்கள் உதவித்தொகை பெறுவது பாதிக்கப்படுவதாகவும். அதனை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த வழக்கில் காவல்துறை அதிரடி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....