Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்; கண்டுகொண்ட அமைச்சர்

    அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள்; கண்டுகொண்ட அமைச்சர்

    தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் இதர பணியாளர்கள் உள்ளிட்ட 4,308 காலிப்பணியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் நிகழ்ந்த பேட்டி ஒன்றில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

    மேலும், அவர் கூறியதாவது: 

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி வாயிலாக நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து, செப்டம்பர் இறுதிக்குள் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 

    கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு இருப்பதால், எல்லை பகுதியான 13 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியீடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....