Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமன்னார் வளைகுடா பகுதிகளில் கடல்சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 

    மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல்சீற்றம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 

    மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக ராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

    தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    இந்நிலையில், ராமநாதபுர மாவட்டம் ராமேஷ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் வடக்கு பாக் ஜலசந்தி மற்றும் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. 

    பலத்த காற்று வீசுவதால், அப்பகுதியில் உள்ள மீன் இறங்கு தளத்தின் மீது ராட்சத அலைகள் மோதுகிறது. அக்கடல்பகுதி அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், பாதுகாப்பு கருதி ராமேஷ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அக்கடற்கரை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....