Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஎஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பை - வெற்றிப்படிகட்டுகளில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

    எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பை – வெற்றிப்படிகட்டுகளில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

    மியாமியில் நடைபெறும் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா2.5-1.5 என பிரபல வீரர் ஹான்ஸ் நீமன்னை மூன்றாவது சுற்றில் வீழ்த்தினார்.

    சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பிறகு அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு தற்போது விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

    இந்த போட்டியில், முதல் சுற்றில் உலகின் தலை சிறந்த ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என்ற கணக்கிலும்,  இரண்டாம் சுற்றில் 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியையும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

    இந்நிலையில், 3-வது சுற்றில் அமெரிக்காவின் பிரபல வீரரான ஹான்ஸ் நீமன்னை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. கார்ல்சனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிறகு தோற்ற நீமன், பிரக்ஞானந்தாவுக்கு எதிராகவும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சமன் செய்தார். 3-வது ஆட்டம் டிரா ஆனது. 4-வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்று 2.5-1.5 என ஹான்ஸ் நீமன்னை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

    இந்த வெற்றி மூலம், 8 வீரர்கள் விளையாடும் இந்த போட்டியில் 9 புள்ளிகளுடன் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 4-வது சுற்றில் லெவோன் ஆரோனியனை அவர் எதிர்கொள்கிறார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....