Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை- ராகுல் காந்தி பாதயாத்திரை

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை- ராகுல் காந்தி பாதயாத்திரை

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    ‘இந்தியா அனைவருக்குமான நாடு’ என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார்.

    150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து, அங்கு அவர் காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு, அங்கிருந்து முதல்படியாக சுமார் 3 கி.மீ. தூரம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த பாதயாத்திரை பேரணி தமிழ்நாட்டில் 59 கிலோ மீட்டர் தூரம், நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    இந்த பாதயாத்திரையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நடைபெறுவதால் தமிழகத்தில் மேலும், ஒரு பகுதிக்கு அவர் வர வேண்டும் என்ற பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை கூடலூர் பகுதிகளுக்கு பாத யாத்திரை செல்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....