Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த்; காரணம் என்ன?

    மு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த்; காரணம் என்ன?

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நினைவுப் பரிசை வழங்கியுள்ளார். 

    1983 – இந்தியாவினால் மறக்க முடியாத ஆண்டு. முதன் முதலில் இந்தியா, கிரிக்கெட்டிற்கான உலககோப்பையை வென்ற ஆண்டுதான் அது. “சுதந்திரம் வாங்கி 35 வருஷம் ஆச்சு ஆனா மரியாதைதான் இன்னும் கிடைக்காம இருக்கு” இதுதான் 1983 க்கு முன்பு வரை கிரிக்கெட்டில் இந்தியாவின் நிலைமை. இந்தியாவில் தற்போது கிரிக்கெட் இந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறதென்றால் அதற்கு அடித்தளம் 1983-ஆம் ஆண்டு கிடைத்த அந்த வெற்றிதான்.

    இந்தியாவின் இந்த வெற்றி அணியில் தமிழக வீரர் ஶ்ரீகாந்த் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். 

    இது குறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திரு.ஶ்ரீகாந்த் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினை சந்தித்து, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப்பரிசை வழங்கியதாக தெரிவித்துள்ளது. 

    187 நாணயங்களை வயிற்றுக்குள் வைத்திருந்த முதியவர் ; ஷாக்கான மருத்துவர்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....