Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; சபரிமலை பக்தர்கள் ஏமாற்றம்

    குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை; சபரிமலை பக்தர்கள் ஏமாற்றம்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி மற்றும் பழைய அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

    இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி பிரதான அருவியை தவிர்த்து, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், பிரதான அருவியில் நீர்வரத்து சீரானதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், மீண்டும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

    2 நாட்கள் பயணமாக திருப்பதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....