Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

    மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா கொடியேற்றம்

    மதுரை அழகர் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 4) கொடியேற்றம் நடைபெற்றது. 

    தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளழகர் கோயில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

    இந்நிலையில், இன்று இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் கட்டி அலங்கரிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 4) காலை கருடன் உருவம் பொரித்த கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கை தீர்த்தத்தால், சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடத்தப்பட்டது.

    மேலும் ஸ்ரீதேவி – பூமாதேவி, சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். 

    சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி- மத்திய அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....