Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழக அரசு

    மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழக அரசு

    நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

    தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் அந்தமான் கடற்பகுதியில் 16ம் தேதி முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் எனவும் இது நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நுழைந்து தமிழக கடற்பகுதியில் வரும் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தொடரக்கூடும் என்றும் காற்றின் வேகம் 45 கிலோ மீட்டர் முதல் 65கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், மீனவர் நலத்துறை மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதில் தமிழ் நாட்டை சார்ந்த மீனவர்கள் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், அதேபோல் ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளனர்,வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கை வழங்கியுள்ளது

    இதையும் படிங்க: ரெப்கோ வங்கியில் வேலை…இளைஞர்களே விண்ணப்பித்துவிட்டீர்களா?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....