Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதெலுங்கானா தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி - பிரதமர் அறிவிப்பு

    தெலுங்கானா தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி – பிரதமர் அறிவிப்பு

    தெலுங்கானா தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

    தெலுங்கானாவில் செகந்திராபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றின் தரை தளத்தில் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும் வசதி அமைந்துள்ளது. 

    இந்நிலையில், அந்த தரை தளத்தில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட கரும் புகையால் 2-வது தளத்தில் உள்ளவர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதில், சிலர் அங்கிருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர். இந்தத் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 

    இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    இந்த தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வருத்தமாக அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரயில் மீது ஏறிய இளைஞர்.. தூக்கி வீசிய மின்சாரம்.. பரமக்குடியில் நடந்த பதற வைக்கும் சம்பவம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....