Sunday, May 12, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கார்த்தி சிதம்பரம் நடிகர் விஜய் குறித்து கருத்து; ரசிகர்கள் கடும் விமர்சனம்

    கார்த்தி சிதம்பரம் நடிகர் விஜய் குறித்து கருத்து; ரசிகர்கள் கடும் விமர்சனம்

    தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடிகர் விஜய் குறித்து கருத்து தெரிவித்ததற்கு அவரது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை நேர மசோதா நிறைவேற்றம் செய்ததும் பிறகு அதை திரும்பப் பெற்றதும், திருமண நிகழ்ச்சிகளில் அனுமதியுடன் மதுபான விருந்து விவகாரம் மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ என கடந்த சில நாட்களாகவே அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. 

    இதனிடையே நடிகரான விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதே சமயம் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக கடந்த உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார். இதற்கு பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து இருந்தனர். 

    இந்நிலையில், நடிகர் விஜயின் அரசியல் வருகையை குறித்த பதிவு ஒன்றுக்கு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார். 

    அரசியலுக்கு வர வேண்டும் என்றால் விஜய்க்கு இது தான் சரியான தருணம் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனை ரீ ட்வீட் செய்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தமிழகத்திற்கு தேவை வளர்ச்சி அரசியல். கவர்ச்சி, உணர்ச்சி அரசியல் அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை விமர்சித்து விஜய் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், அவரின் கருத்திற்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

    பொன்னியின் செல்வன் படத்தின் ஸ்னீக் பிக் காட்சிகள் வெளியீடு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....