Friday, May 3, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கால்பந்து உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து...பலப்பரீட்சையில் பிரான்ஸ்

    கால்பந்து உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து…பலப்பரீட்சையில் பிரான்ஸ்

    கால்பந்து உலகக் கோப்பையில் நாக்-அவுட் சுற்றில் வெற்றிப்பெற்று இங்கிலாந்து அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டிகள் தற்போது அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்து, நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. 

    இந்த நாக்-அவுட் சுற்றில் நேற்று இரு ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் செனகல் அணிகள் ஆட்டம் கண்டன.  நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டமானது நடைபெற்றது. 

    இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே,  இங்கிலாந்து அணி தன்னிடமே பந்தை வைத்துக்கொண்டிருந்தது. இந்த ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஹெண்டர்சன் ஒருகோல் அடித்தார். 

    இந்த கோலின் மூலம், இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, முதல்பாதி ஆட்டத்தின் 45+3-ஆவது கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் கேன் ஒருகோல் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் சகா ஒரு கோல் அடித்தார்.

    மொத்தத்தில், ஆட்டத்தின் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. 

    முன்னதாக நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்றில் போலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதி அணியில் மோதவுள்ளன. 

    வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; போராடி தோற்ற இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....