Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து; காரணம் என்ன?

    இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் ரத்து; காரணம் என்ன?

    இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி தற்போது முதல் முறையாக இந்தியாவில் நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் எனவும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA  அறிவித்துள்ளது. 

    மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய FIFA முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை இனி வாங்க முடியாதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....