Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் - மருத்துவர் ராமதாஸ்

    மக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் – மருத்துவர் ராமதாஸ்

    காய்ச்சல் மற்றும் நோய்களுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து, இன்று (செப்டம்பர் 17) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1என்1 (H1N1) சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. நடப்பாண்டில் இந்த வகை காய்ச்சல்கள் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவது பெரும் கவலையையும், அச்சத்தையும் அளிக்கிறது.

    இதையும் படிங்க: முன்னுரை எழுதியவரே மிஸ்ஸிங் ? ‘அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டில் பங்கேற்காத இளையராஜா

    இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. எந்தெந்த பகுதிகளில் காய்ச்சல் அதிகமாக பரவுகிறது என்பதைக் கண்டறிவதற்கு சோதனையோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை. இது காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவ வகை செய்து விடும்.

    தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வகையான காய்ச்சல்கள் பரவுகின்றன? நோய் தாக்கினால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து கிராமங்களிலும்  மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த வேண்டும்.

    குழந்தைகள் ஒன்று கூடி விளையாடும் பள்ளிகள் வாயிலாகத் தான் காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாகத் தோன்றுகிறது. குழந்தைகளைக் காக்கவும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தவும், நிலைமை சீரடையும் வரை, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....