Tuesday, April 30, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘உயிர் சாவில் முடிவதில்லை, கலை சாவை மதிப்பதில்லை’-ஹாரிபாட்டர் நடிகரின் மறைவால் உருகும் ரசிகர்கள்!

    ‘உயிர் சாவில் முடிவதில்லை, கலை சாவை மதிப்பதில்லை’-ஹாரிபாட்டர் நடிகரின் மறைவால் உருகும் ரசிகர்கள்!

    புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரிபாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட திரைப்படம்தான், ஹாரிபாட்டர். உலகளவில் ஹாரிபாட்டர் திரைப்படம் பெரும் ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. பல மனிதர்களுக்கு  ஹாரிபாட்டர் திரைப்பட தொடர் என்பது வெறுமனே ஒரு திரைப்படமாக இல்லை, அதையும் தாண்டிய ஒன்றாகவே பலருக்கும் இப்படம் உள்ளது. உணர்வுப்பூர்வமான ஒரு சங்கிலி ஹாரிபாட்டர் படத்திற்கும் ரசிகர்களும் இடையே உள்ளது. 

    மேலும், இத்திரைப்படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள் பலவும் ரசிகர்களுக்கு நெருக்கமான ஒன்றாக மாறிப்போனது. இந்த கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அதன் பிறகு எவ்வளவு சிறந்த திரைப்படங்களில் நடித்தாலும், ‘ஹாரிபாட்டர்தான் பெஸ்ட்’ எனும் சொல்லும் அளவிற்கு இத்திரைப்படத்தின் மீதும், கதாப்பாத்திரங்கள் மீதும், நடிகர்கள் மீதும் ரசிகர்கள் அன்பிலான ஒரு  பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

    இந்நிலையில், ஹாரிபாட்டர் திரைப்படத்தில் ‘ஹக்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரி தற்போது இயற்கை எய்தியுள்ளார். 72 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமனார்.

    இதையும் படிங்க:அரக்கத்தனமான காதல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- பா.ம.க. நிறுவனர் வலியுறுத்தல்

    ரூபி கால்ட்ரி ஹாரிபாட்டர் திரைப்படத்தில் நடித்த ‘ஹக்ரிட்’ கதாப்பாத்திரம் என்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இன்னும் சொல்லப்போனால் ஹாரிபாட்டர் திரைப்படம் பார்த்த அனைவரும் அறிந்தோ அறியாமலோ இந்த கதாப்பாத்திரத்தை ரசித்திருப்பர். அதில் மாற்றுகருத்தே இல்லை. 

    பெரிய உருவம், ஒழுங்கற்ற உடை, தாடி, தொப்பை என இயல்பாக கேலிக்கு என்று திரையுலகம் பயன்படுத்திய உடலமைப்பை கொண்டே இந்த ஹக்ரிட் கதாப்பாத்திரம் இருக்கும். ஆனால், இங்கே கேலி என்பதே இல்லை மாறாக குறும்பும் அன்பும் மட்டுமே. ஒரு துணையாக இந்த கதாப்பாத்திரம் இருக்கும். இப்போதும் பலர் ராபி கால்ட்ரேன் நடித்த ஹக்ரிட் கதாப்பாத்திரம் போல் வாழ்வில் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்குமென சிந்திப்பர். 

    இப்படியான கதாப்பாத்திரத்தில் நடித்த ராபி கால்ட்ரேனின் மறைவு உலகெங்கும் உள்ள ஹாரிபாட்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    திரைப்படத்தில் ஹாரிபாட்டர் கதாப்பாத்திரம்  ஹக்ரிட் கதாப்பாத்திரத்தை நோக்கி ‘ நீங்க இல்லையேன்றால் ஹாக்வேர்ட்ஸ் இல்லை’ என்று கூறும்.  அதேப்போலத்தான் ‘ ரூபி கால்ட்ரி இல்லையேன்றால் ஹாரிபாட்டர் திரைப்படம் இல்லை’.  போய்வாருங்கள் ராபி கால்ட்ரேன், எப்போதும் ஹக்ரிட் கதாப்பாத்திரத்தின் வாயிலாக நீங்கள் எங்களுடன் இருப்பீர். 

    ‘உயிர் சாவில் முடிவதில்லை. கலை சாவை மதிப்பதில்லை’ என்ற கவிதையின் சாரம்சத்திற்குள்தான் ராபி கால்ட்ரேனின் பிரிவும் அடங்கும். 

    இதையும் படிங்க: உலகக் கோப்பையில் இந்திய அணி… நம்ம அணியோட ஆட்ட நேரங்களும் தேதிகளும் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....