Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோட்டில் தேர்தலை முன்னிட்டு குக்கர் விநியோகம்; வெளியான காணொளி!

    ஈரோட்டில் தேர்தலை முன்னிட்டு குக்கர் விநியோகம்; வெளியான காணொளி!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குக்கர், கொலுசு போன்ற பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. 

    அதன்படி வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

    இந்தத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சிந்தா நகர், மாதவ காடு ஆகிய இடங்களில் குக்கர், கொலுசு போன்றவை விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

    மேலும், இது தொடர்பாக ஒரு காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில் பெண் ஒருவர் கை சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி குக்கர் கொடுத்ததாக கூறுகிறார். இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    தென்காசியில் பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்..காவல்துறை நடவடிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....