Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கஞ்சா விற்பனையில் அமோகமாய் தமிழகம், இதுதான் திமுக ஆட்சியின் சாதனையா? - எடப்பாடி காட்டம்!

    கஞ்சா விற்பனையில் அமோகமாய் தமிழகம், இதுதான் திமுக ஆட்சியின் சாதனையா? – எடப்பாடி காட்டம்!

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது இதுதான் திமுக ஆட்சியின் சாதனையா? ஊழல் செய்வதிலும், லஞ்சம் பெறுவதிலும் கூட திமுக அரசு முதன்மை தான் என்று கூறியதுடன், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார் .

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: அதிமுகவில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டி வருகின்றனர். இந்த ஓராண்டு காலத்தில் திமுக செய்த சாதனை இதுதான். இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின் என்று சொல்லிக் கொள்கிறார்.

    திமுகவின் ஓராண்டில், ஊழல் செய்வதில் முதன்மை, லஞ்சம் பெறுவதில் திமுக அரசு முதன்மையாக விளங்குகிறது குறிப்பாக, எது கிடைக்கிறதோ? இல்லையோ? மாநிலம் முழுவதும், கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா அமோகமாக கிடைக்கிறது. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில்தான் திமுக அரசு சாதனை படைத்துள்ளது.

    கஞ்சாவால், தமிழக மாணவர்கள் இளைஞர்கள் சீரழிந்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை 2200 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அண்மையில் முதல்வர் தாக்கல் செய்த காவல்துறை மானியக் கோரிக்கை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறை அமைச்சர் 102 டன் கஞ்சா பிடுபட்டுள்ளதாக கூறியிருக்கிறார். கண்டுபிடித்ததே இவ்வளவு என்றால் கண்டுபிடிக்காத எவ்வளவு என்பதை எண்ணி பார்க்க வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், தமிழக காவல்துறை டிஜிபி அவர்கள் கஞ்சாவை கட்டுப்படுத்தவதற்காக ஆபரேசன் கஞ்சா 2.O மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் தலையிட்டு கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், காவல்துறை கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியும். திமுக அரசு இதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    ஆனால், திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. இளைஞர்களையும், மாணவர்களையும் காப்பாற்ற முடியாமல் விடியல் அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தோடு இணைந்து கொண்டு, தடை செய்ய அரசிற்கு மனம் இல்லை. மனமிருந்தால் சட்டத் திருத்தம் கொண்டு வந்து தடை செய்திருக்கலாம்.

    தலைநகர் சென்னை மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதும், திமுக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் பத்திரிக்கைச் சுதந்திரம் முழுமையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

    ஆளும்கட்சி பிரமுகர்கள் தலையீடு காவல் துறையில் அதிக அளவில் இருப்பதால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. மக்கள் திமுக அரசின் மீது நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

    கள்ளக் காதலனுக்காக கணவனையே வாழைக்கு உரமாக்கிய மனைவி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....