Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவார்டுக்குள் நுழைந்த யானைகள் ! அலறிய நோயாளிகள்... வைரல் வீடியோ

    வார்டுக்குள் நுழைந்த யானைகள் ! அலறிய நோயாளிகள்… வைரல் வீடியோ

    ராணுவ குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனை வார்டுக்குள் காட்டு யானைகள் புகுந்ததால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும் மக்களை அச்சுறுத்துவதும், குடியிருப்புகளை சேதப்படுத்துவதும் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது ராணுவ மருத்துவமனை.

    அந்த மருத்துவமனை வார்டுக்குள் நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும் போதே ,நீங்க மட்டும்தான் வரணுமா, நாங்கள் வரக்கூடாத, எங்களுக்கும் மருத்துவம் பார்க்கணும் டாக்டர் என்பது போல் மூன்று யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக நுழைந்துள்ளன. முதலில், ஒரு யானை குனிந்தபடி வார்டு ஒன்றுக்குள் நுழைகிறது. அதன்பின்னர், பின்னாலேயே வரும் மற்ற இரு யானைகளும் அதே வார்டுக்குள் போகின்றன. இதனை சற்று தொலைவில் உள்ள வார்டில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பதிவை பார்த்த பார்வையாளர்கள் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை அளித்துள்ளனர்.

    இதில் பலபேர்

    யானை : may i come in
    நோயாளி : ஐயோ யான ஆ ஆ யான
    யானை : கத்தாத மேன் தூக்கி போட்டு மிதிச்சிருவேன்

    தலைமை செயலகம் சென்று நம்ம முதல்வர தூக்கி போட்டு மிதிக்காம இருந்தா சரி

    யானை : எங்களுக்கு காய்ச்சல் வந்தா நீங்க பாக்கமாட்டிங்களா

    யானை : என் பெட்டு எங்கங்க டாக்டர் …என்று வடிவேலின் நகைச்சுவை கலந்த காமெடியோடு கருத்துக்களையும், விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

    இதையும் படிங்க  : கழுத்தை அறுத்து வாயில் ஆசிட் ஊற்றிய தாய்மாமன் ! சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....