Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாசு

    இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாசு

    இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படத்திற்கு இன்று காலை மருத்துவர் ராமதாசு அஞ்சலி செலுத்தினார். 

    ‘கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாக  21 ஈகியர்கள் ஒரே போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தனர். சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில்  இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். 

    அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும்’ என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு பாமக தொண்டர்களுக்கு கடிதம் எழுதினார். 

    இதையும் படிங்க: மக்களுக்கு தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு கட்டாயம் – மருத்துவர் ராமதாஸ்

    இந்நிலையில், இன்று காலை திண்டிவனம் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் வன்னியர் சங்கம் சார்பில் 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் உருவப்படத்திற்கு மருத்துவர் ராமதாசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....