Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க., ஆதரவு இவருக்குத்தான்.......

    ஜனாதிபதி தேர்தல்: தி.மு.க., ஆதரவு இவருக்குத்தான்…….

    ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை தி.மு.க., ஆதரிக்க முடிவு செய்துள்ளது. வேட்பு மனுத் தாக்கலின்போது, அவரை தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு முன்மொழிய உள்ளார்.

    இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பலகட்ட ஆலோசனைகள் இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பாஜகவிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று முன் தினம் யஷ்வந்த் சின்ஹா விலகினார்.

    ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ., வேட்பாளர் திரவுபதி முர்மு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். பா.ஜ., வேட்பாளருக்கு எதிராக, காங்., – திரிணமுல் காங்., உள்ளிட்ட கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தி உள்ளன. அவர், வரும் 27ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    அவரை முன்மொழிவதற்காக, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் லோக்சபா குழு தலைவர் டி.ஆர்.பாலு டில்லி செல்கிறார். தன் முதற்கட்ட பிரசாரத்தை யஷ்வந்த் சின்ஹா, ஜார்க்கண்ட், பீஹார் மாநிலங்களில் முடித்து விட்டு, அடுத்த மாதம் முதல் வாரம் தமிழகம் வருகிறார். முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்ட உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

    மேலும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து தான் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும். பிரதமர் மோடி, திரெளபதி முர்முவின் வேட்புமனுவை முதலில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மத்திய அமைச்சர்கள் முன்மொழிந்தனர். முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று திரெளபதி முர்மு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

    ‘அறிவினை விரிவு செய்’- கல்லூரிக் கனவு நிகழ்ச்சியினைத் துவங்கி வைத்துள்ள தமிழக முதல்வர்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....