Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல்; ஈரோட்டில் பரபரப்பு

    திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; ஈரோட்டில் பரபரப்பு

    திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அத்தொகுதியில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

    அந்த சமயத்தில், திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் உண்டானது. இதன் காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள் என அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோர் அலறி அடித்துக்கொண்டு ஓடிச் சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் துணை ராணுவப் படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். 

    இந்த மோதல் சம்பவத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், 3 காவலர்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    தீ மிதிக்கும்போது ஏன் பாதங்களில் காயம் ஏற்படுவதில்லை? – காரணம் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....