Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'காதல்னு வந்துட்டா..மனசு மட்டுமல்ல....' - ரசிகர்களை கவர்ந்து வரும் இயக்குநர் ராமின் திரைப்பட டைட்டில் வீடியோ!

    ‘காதல்னு வந்துட்டா..மனசு மட்டுமல்ல….’ – ரசிகர்களை கவர்ந்து வரும் இயக்குநர் ராமின் திரைப்பட டைட்டில் வீடியோ!

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய திரையுலகில் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர்களில் ஒருவர்தான், இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு என இவர் எடுத்த அனைத்து திரைப்படங்களும் விமர்சன ரீதியாக நற்பெயர் பெற்றவையே. 

    இந்நிலையில், தரமணிக்கு பிறகு ராம் இயக்கும் திரைப்படம் குறித்து தொடர்ந்து பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. அச்சமயத்தில்தான், நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடிப்பில் ராம் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. 

    பல நாள்களாக படப்பிடிப்பில் இருந்த திரைப்படத்தின் டைட்டில் வீடியோ இன்று வெளிவந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ‘ஏழு மலை ஏழு கடல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…மிரட்டிய ஷ்ரேயா கோஷல்

    பொதுவாகவே, காதல் கதைகளில் எனக்காக நீ ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வருவாயா என்றும், உனக்கா நான் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி வருவேன் என்றும் சொல்வது இயல்பான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இயக்குநர் ராம் தனது படத்திற்கு அதையே தலைப்பாக தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. 

    காதலின் அடிநாதத்திலேயே ஏழு மலை, ஏழு கடல் திரைப்படம் இருக்கும் என்பது டைட்டில் வீடியோவின் இறுதியில் வரும், ‘காதல்னு வந்துட்டா..மனசு மட்டுமல்ல….உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும்’ என்ற வசனத்தை கொண்டு நம்மால் அறியமுடிகிறது. தற்போது இந்த டைட்டில் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....