Sunday, April 28, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு அபராதம்; நடந்தது என்ன?

    காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு அபராதம்; நடந்தது என்ன?

    காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமி ரூ. 10 ஆயிரம் அபராதத்தை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றதில் இன்று செலுத்தினார்.

    நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தது. 

    இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், தொடர்ந்து படம் எடுத்ததையடுத்து, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பி செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ரூ.1.3 கோடிக்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார்.

    இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி, அவரது சகோதரருக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

    இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த லிங்குசாமி, மேல்முறையீடு செய்து சட்டரீதியாக பிரச்னையை சந்திப்போம் எனத் தெரிவித்த நிலையில், இன்று (ஆகஸ்ட் – 24) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ. 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....