Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தீரன் சின்னமலை நினைவுதினம்; மரியாதை செலுத்திய பிரமுகர்கள்

    தீரன் சின்னமலை நினைவுதினம்; மரியாதை செலுத்திய பிரமுகர்கள்

    தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3) தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்திலையில், சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    தமிழக முதல்வரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். இதனைத் தொடர்ந்து, கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ‘அடுத்தடுத்து 3 போர்களில் ஆங்கிலேயர்களை வீழ்த்தி, அவர்களை நடுங்க வைத்த வீரத்தின் விளைநிலம் கொங்கு நாட்டு மன்னர், தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்; அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,  வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி இன்று (ஆகஸ்ட் 3) ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    ஐ.ஐ.டி. இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – மதுரை எம்.பி கேள்வி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....