Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநடுவானில் திடீர் புகை- அவசரமாக தரையிறங்கிய விமானம்

    நடுவானில் திடீர் புகை- அவசரமாக தரையிறங்கிய விமானம்

    நடுவானில் விமானத்தின் உள்ளே திடீரென புகை வரத் தொடங்கியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

    தலைநகர் தில்லி விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று இன்று காலை ஜபல்பூருக்கு புறப்பட்டது. நடுவானில் 5000 அடி உயரத்துக்கு மேல் விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக விமானத்தின் உள் பகுதியிலிருந்து புகை வெளிவரத்தொடங்கியது. 

    இதனைக் கண்ட பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்பு உடனடியாக தில்லி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் இன்று காலை தில்லி நிலையத்தில் மீண்டும் பாதுகாப்புடன் தரை இறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    இதனிடையே, விமானத்தில் பயணித்த ஒருவர் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....