Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைவங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    புது தில்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுப்பெறுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    ஒடிசா, மேற்கு வங்கக் கடலோர பகுதியை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாள்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சத்தீஸ்கர், கோவா, மேற்கு மற்றும் கிழக்கு மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது, உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் எந்த ஆபத்தும் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா தொற்று

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....