Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

    ஏழுமலையான் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம்

    ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். 

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அரசு முறை பயணமாக ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று (நவம்பர் 5) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார். 

    நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் திரௌபதி முர்மு, முதல் முறையாக திருப்பதி வந்து இருப்பதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    கோயில் அரங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி குடியரசுத் தலைவரை வரவேற்றார். மேலும் குடியரசுத் தலைவரை வராக சுவாமி மற்றும் ஏழுமலையானை தரிசனம் செய்ய வைத்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கினார்.  

    சாமி தரிசனம் முடித்து கிளம்பிய குடியரசுத் தலைவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் புத்தகம் மற்றும் கோயில் சார்பில் வெளியிடப்பட்ட 2023 ஆம் ஆண்டுகால நாள்காட்டி, நாள்குறிப்பு ஆகியவையும் உடன் வழங்கப்பட்டது. 

    கால்பந்து உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து…பலப்பரீட்சையில் பிரான்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....