Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்எங்கடா இங்க இருந்த பத்திரம்?- ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி. சண்முகம் புகார்

    எங்கடா இங்க இருந்த பத்திரம்?- ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி. சண்முகம் புகார்

    அதிமுக அலுவலகத்தின் பத்திரங்களைக் காணவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மீது முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிமுக கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, மோதல் வன்முறையாக மாறியது. இதில், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். 

    இதனை தொடர்ந்து, சீலை அகற்றக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அலுவலகத்தை திறக்க அனுமதித்து, தலைமை அலுவலகத்தின் சாவியை உடனடியாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

    அதன் அடிப்படியில், அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டது. இதன் பிறகு, அதிமுக தலைமை அலுவகத்தில் சேதமடைந்த இடங்களை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் பார்வையிட்டனர். மேலும், அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பொருள்களைக் காணவில்லை என ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று (ஜூலை 23) புகார் அளித்துள்ளார். 

    இதன்பிறகு சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 

    அதிமுக அலுவலகத்தில் முக்கிய பத்திரங்களை காணவில்லை. அண்ணா சாலையில் உள்ள சைபர் தியேட்டர் இடத்தின் அசல் பத்திரிக்கையை காணவில்லை. அதேபோல், அதிமுக கட்சிக்கு சொந்தமான மொத்தம் 37 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்களையும் காணவில்லை. 

    தலைமைக் கழகத்தை உடைத்து உள்ளே சென்று அதற்கு, சீல் வைக்க காரணமாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவரின் வாகனத்தில் ஆவணங்களை எடுத்துச் சென்றது அனைவருக்குமே தெரியும். 

    இந்தியாவில் எந்த ஒரு கட்சியிலும் இதுபோன்ற மோசமான சம்பவம் இடம்பெறவில்லை. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறை பாதுகாப்பு கோரி மனு அளித்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. 

    சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகம் போதை நகரமாக மாறியுள்ளது. 

    அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்த்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

    மோசடி செய்த அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....