Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்

    நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம்

    நாட்டிலேயே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது. 

    உள்ளூரில் பிரபலமான தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் பிரதமரின் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. 

    இந்தத் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆறு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் மிகவும் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், தூத்துகுடியில் மக்ரூன், விருதுநகரில் சாத்தூர் காராச்சேவ், கோவில்பட்டியில் கடலை மிட்டாய், தென்காசியில் மூங்கில் பொருட்கள் விற்பனையகம்  மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக மதுரை ரயில் நிலையத்தின் உள்புறம் கருவாடு விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    ராகுல் காந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை? – மக்களவை செயலகம் உத்தரவு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....