Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகும் உயிர்கள்

    கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து பலியாகும் உயிர்கள்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,135 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,135 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,35,18,564 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனோ தொற்று காரணமாக 24 பேர் உயிரிழந்தனர். 

    இதன்மூலம், இதுவரை தொற்றால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,22,223 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 13,958 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,79,477 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,78,383 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னையில் முகக் கவசம் கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. வணிக வளாகங்கள் மட்டுமின்றி, திரையரங்குகள், துணிக்கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    காரைக்காலில் மருத்துவ அவசரநிலை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....