Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇன்று சற்று அதிகரித்த கொரோனா தொற்று

    இன்று சற்று அதிகரித்த கொரோனா தொற்று

    புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் நேற்று புதிதாக 6,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்படை விட சற்று அதிகமாகும்.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

    சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 7,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,49,726 ஆக அதிகரித்துள்ளது. 

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 56,745 ஆக குறைந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33 பேர் உயிரிழந்தனர். இதனால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,27,965 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 9,651 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,65,016 ஆக அதிகரித்துள்ளது. 

    நாடு முழுவதும் இதுவரை 213.01 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    இவ்வாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....