Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி ரேஷன்களிலும் நோ கேஷ்..? வருகிறது கூகுள் பே, பேடிஎம் வசதி!

    இனி ரேஷன்களிலும் நோ கேஷ்..? வருகிறது கூகுள் பே, பேடிஎம் வசதி!

    தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.  

    நியாயவிலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை குறிப்பிட்டு, அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33,377 கடைகள் மட்டும் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

    இந்த நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான தரச்சான்றிதழ், உணவுப் பொருள்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி (example) நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் பரீட்சார்த்த முறையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் 5 கிலோ மற்றும் 2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

    தொடர்ந்து அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நியாயவிலைக் கடைகளில் யூபிஐ போன்ற ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் அடுத்தடுத்த படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

    நியாயவிலைக் கடைகளின் அருகில் போதுமான காலியிடம் இருப்பின், அந்த இடங்களில் 10 MT முதல் 50 MT வரை கொள்ளளவு கொண்ட பொருள்கள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில், ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

    மேலும் அவர், தமிழகம் முழுவதிலும் 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 26,272 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதாவது, ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தது 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அதனால், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை, இல்லாமல் இருப்பதை இலக்காகக் கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றும்  ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

    இதையும் படிங்க : பொதுமக்கள் முன்பு ஆட்சியரை வறுத்தெடுத்த சீதாராமன் – ரேஷன் கடையில் பரபரப்பு !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....