Monday, May 6, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரம்.. அடுத்த கட்டத்துக்கு சென்ற சுகாதாரத்துறை

    நயன்தாரா-விக்னேஷ் சிவன் விவகாரம்.. அடுத்த கட்டத்துக்கு சென்ற சுகாதாரத்துறை

    சுகாதாரத் துறை குழுவினர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினரை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதள பக்கத்தில், கடந்த 9-ம் தேதி “நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இரட்டை ஆண் குழந்தைகள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து, நமக்கு 2  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என்று குறிப்பிட்டு இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்தார். 

    இதையும் படிங்க: நடிகர் அர்னவ் விரைவில் கைது செய்யப்படுகிறாரா? தானாக கேசை கையில் எடுத்த கர்நாடக மகளிர் ஆணையம்

    இருவரும் குழந்தைகளை தத்து எடுத்திருக்கலாம் என்று தகவல்கள் பரவ, வாடகைத்தாய் மூலம் இந்த குழந்தைகளை இவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், வாடகைத்தாய் முறையென்றால் பல சட்டங்கள் உள்ளது அதையெல்லாம் அவர்கள் பின்பற்றினார்களா என்ற கேள்விகளும் சமூகவலைதளத்தில் பரவின. 

    இதைத்தொடர்ந்து, இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்ககம் (டிஎம்எஸ்) இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணையில் திடீர் திருப்பமாக, நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016-ம் ஆண்டிலேயே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த 2021 டிசம்பர் மாதம் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு பதிவு செய்ததாகவும்,  இதற்கான ஆவணங்களை சுகாதாரத் துறை குழுவினரிடம் இவர்கள் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்நிலையில், விசாரணையின் அடுத்தக்கட்டமாக சுகாதாரத் துறை குழுவினர், நயன்தார -விக்னேஷ் சிவன் தம்பதியினரை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....