Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக - திமுக இடையே கடும் வாக்குவாதம்...

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக – திமுக இடையே கடும் வாக்குவாதம்…

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், திமுக-அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் தங்களின் வாக்குகளை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா என 77 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். 

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் திமுக-அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    ஈரோடு, பெரியார் நகர் பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டதால் திமுக-அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு சென்று இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    நேஷனல் ஜியாகிராபியின் சிறந்த புகைப்படமாக இந்தியர் புகைப்படம் தேர்வு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....